ஸ்வச்சதா பக்வாடா தூய்மை பணி முகாம்

ஸ்வச்சதா பக்வாடா தூய்மை பணி முகாம்

‘தூய்மை இந்தியா’ திட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு




பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக நோய் தடுப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் சிறப்பு நிகழ்வாக இன்று (06.07.2018) மண்டலம் – 9, ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள, சென்னை நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவியர்களுக்கு நோய் தடுப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்ட சம்பந்தமாக காலை 11 மணி முதல் 12.30 வரை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் பெருநகர மாநகராட்சியுடன் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் 250 மாணவ, மாணவியர்களுக்கு தன் சுகாதாரத் தூய்மைப் பெட்டகம் வழங்கப்பட்டது.




இந்நிகழ்ச்சியில், தொற்று நோய்கள் உருவாகும் விதம், அவற்றை தடுக்கும் முறைகள்,  முறையாக 20 நொடிகள் தொடர்ந்து சோப்பு உபயோகித்து கைகழுவுவதனால் எவ்வாறு தொற்று நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது.  செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.  மாணவ, மாணவியர்கள் அனைவரும் முறையாக கை கழுவினர்.  தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தளிப்பதற்கான முக்கியத்துவம், ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  மாணவ, மாணவியர்கள் தன் வீடு, பள்ளி, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பதுடன், அருகாண்மையில் உள்ளவர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.




இந்நிகழ்ச்சியில் சுகாதார கல்வி அலுவலர் முனைவர் T.G சீனிவாசன்,  உதவி கல்வி அலுவலர் திருமதி. பக்தபிரியா, இந்தியன் ஆயில் நிறுவனம் முதன்மை பொது மேலாளர் S. சுந்தர், சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் G.  தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.