Driving licence will be cancelled  if you don’t follow road laws

*1) 5 முக்கிய சாலை விதிகளை மீறினால் ஓட்டுனர் உரிமம் தற்காலிக அல்லது நிரந்தரமாக ரத்து – மாநில சாலைப் பாதுகாப்புக் குழு எச்சரிக்கை.*

* வாகனங்களை அதிவேகமாக இயக்குதல்,

* சிவப்பு விளக்கை தாண்டுதல்,

* குடிபோதையில் வாகனம் இயக்குதல்,

* வாகனத்தை இயக்கும்பொழுது செல்போனை பயன்படுத்துதல்…

* சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல்/ சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றுதல்.





*2) உயிரிழப்பு ஏற்படுத்திய வாகன ஓட்டுனர்கள் ஓட்டுநர் உரிமங்களை திரும்பப் பெறுவதற்கு முன் அரசால் நடத்தப்படும் பயிற்சி மையங்களில் 2 நாள் புத்தாக்க பயிற்சியினை அவர்களின் சொந்த செலவில் மேற்கொண்டு உரிய சான்றினை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.*

*3) இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் பயணியும் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும்.*

*4) தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு 2 மணி நேரம் விழிப்புணர்வு பயிற்சி கொடுக்கப்பட்டு, உரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.*

*5) தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்துப்பணி வாகனகள் அதிக அளவில் ரோந்துப் பணி மேற்கொண்டு,அச்சாலைகளில் நடைபெறும் விபத்துகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.*




*6) சாலை அமைக்கும் பணி, அரசு துறைகளுக்கான சீரமைப்பு பணிகள் நடைபெறும் போது இந்திய சாலை காங்கிரஸ் பிறப்பித்துள்ள வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஒப்பந்ததாரர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.*

*7) மூன்றாம் நபர் காப்பீட்டுச் சான்றிதழ் (Third Party Insurance) இல்லாமல் இயங்கும் வாகனங்களை சிறை பிடித்து உரிய சான்றிதழ் வழங்கிய பின்னர் வாகனங்களை விடுவிக்கலாம்.*

*8) வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை ஓட்டும்போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும்.



Leave Your Comments