Vaels_International_School_Injambakkam

Vaels International School, Injambakkam, held its annual cultural programme

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் சரதேச பள்ளியில் “கலாக்ருதி” என்ற பள்ளிகளுக்கிடையேயான  கலை நிகழ்ச்சி  இம்மாதம் 12  மற்றும் 13 ஆம் தேதிகளில் நடை பெற்றது . வேல்ஸ் பள்ளியின் நிறுவனரும் வேல்ஸ் பல்கலைக்கழக    வேந்தருமான  டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் விழாவினை துவக்கி வைத்தார் . ப்ரோ சேன்சிலர்  திருமதி .ஆர்த்தி கணேஷ் ,பள்ளியின் டைரக்டர் திரு. விஜயகுமார் மற்றும் திருமதி மீனாட்சி ( டைரக்டர்,ஆராய்ச்சி பிரிவு ), இப்பள்ளி முதல்வர் திருமதி . பாரதி லட்சுமி ஆகியோர் உடனிருந்து சிறப்பு செய்தனர்.

Vaels_International_School
Vaels_International_School

அந்தந்த துறைகளில்  புகழ் பெற்றவர்கள் போட்டிகளின் நடுவர்களாக இருந்தனர். சுமார் 18 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். ஆட்செப் , ஷிப் ரெக்    , ஸ்வீட் டூத் , கட்லரி பீட்ஸ் , ரிமோட் ரைட் போன்ற போட்டிகள் நடைபெற்றன . பங்கு கொண்ட மாணவர்களிடம் வெற்றி பெற வேண்டும் என்ற உத் வேகமும் பரஸ்பர நட்புணர்வும் காணப்பட்டது .

பல்வேறு போட்டிகளில் வென்று ” சிறந்த சாதனை “காண சுழல்  கோப்பையை சேக்ரெட்  ஹார்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகன்டரி  பள்ளி ( சர்ச் பார்க் ) வென்றது.

இப்பள்ளியின் முன்னாள் மாணவியும் இளைய திரைப்பட நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் செல்வி  லவ்லின்  மற்றும் ப்ரோ சேன்சிலர்  திருமதி .ஆர்த்தி கணேஷ்  அவர்கள் போட்டிகளில் வெற்றி பெட்ரா மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர் . மாறும் வேல்ஸ் பள்ளி மாணவர்கள் அற்புதமான நடனத்துடன் விழா இனிதே நிறைவுற்றது . பங்கு பெற்ற பள்ளிகள் அடுத்த கலாக்ருதி எப்போது நடைபெற போகிறது என்ற எதிர்பார்ப்புடன் விடை பெற்று சென்றது  நிகழ்ச்சியின்  முத்தாய்ப்பாக அமைந்தது என்று கூறினால் மிகையாகாது  .