கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம்
கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் மக்களை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து செல்லும் ஒரு படைப்பாக இருக்கும் !! #KIK from Nov18
இயக்குநர் ராஜேஷ்.M பேசியது , கடவுள் இருக்கான் குமாரு வெள்ளிக்கிழமை நவம்பர் 18ஆம் தேதி releaseயாகிறது. இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பண பிரச்சனை தான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிகிழமை வெளியிடுமாறு கேட்டு கொண்டனர். கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வருகிற வெளியாகும் போது மக்கள் அதை மகிழ்சியுடன் பார்த்து ரசிக்க எதுவாக இருக்கும். கடவுள் இருக்கான் குமாரு மக்கள் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும் வகையில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். இப்படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகுகிறது. இது பெரிய நடிகர்களுக்கு நிகரான ஒரு வெளியீடாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து ஒரு திரைப்படம் 400 திரையரங்குக்கு மேல் வெளியாவது இதுவே முதன் முறை என்றார் இயக்குநர் ராஜேஷ்.