சென்னை கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய உயர்நிலைப் பள்ளியில் ஜப்பானிய மொழி வகுப்புகள் ஆரம்பம்
கடந்த அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி, விஜயதசமி நன்னாளில் தென் சென்னை கிழக்கு தாம்பரத்தில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா தேசிய உயர்நிலைப் பள்ளியில் ஜப்பானிய மொழிக்கல்வி வகுப்புகள் தொடங்கின. ஜப்பானிய மொழிக்கல்வி வகுப்புகள் அளித்துவரும் ABK AOTS DOSOKAI, TAMILNADU CENTRE– இன் உறுப்பு பள்ளியாக எனிஷி நிஹாங்கோ கக்கோ ஜெயகோபால் கரோடியா தேசிய உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது . ABK AOTS DOSOKAI, TAMIL NADU CENTRE-இன் தலைவர் திரு .ரங்கநாதன் அவர்களின் ஆதரவுடனும், கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய உயர்நிலைப் பள்ளியின் இணைச்செயலர் திரு ராஜேந்திரன் அவர்கள் மற்றும் கல்வி ஆலோசகர் திரு .விஸ்வநாதன் அவர்களுடைய ஆதரவுடனும் ஜப்பானிய மொழி வகுப்புகள் ஜெயகோபால் கரோடியா தேசிய உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் விஜயதசமி அன்று தொடங்கிவைக்கப்பட்டது .
இனிஷி நிஹாங்கோ கக்கோ வின் இயக்குனரான திருமதி காயத்ரி அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார்.
துவக்க விழாவை ABK AOTS DOSOKAI-யின் துணைத்தலைவர் திரு ஸ்ரீராம் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.அவருடைய உரையில் ஜப்பான் நாடு பொருளாதார ரீதியிலும் , தொழில்நுட்ப ரீதியாகவும் மிகவும் வளர்ந்திருந்தாலும், வளர்ந்து வரும் முதியவர்களின் எண்ணிக்கையாலும், குறைந்து கொண்டே வரும் இளைய சமுதாய எண்ணிக்கையாலும் அந்நாட்டின் வருங்காலத்தை எண்ணி கவலை கொண்டுள்ளது. மாற்றாக, இந்தியா,ஸ்ரீலங்கா,இந்தோனேஷியா,மலேஷியா,வியட்நாம் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், தொழில்நுட்பம் சிறிதே பின்தங்கி இருந்தாலும், மக்கள்தொகையில் 50% மேற்ப்பட்டோர் இளைய சமுதாயத்தை சேர்ந்தவர். ஆதலால், இந்த நாடுகளுடன் நல்லிணக்க உறவு கொண்டு முன்னேற்றத்திற்கான பல முயற்சிகளை ஜப்பான் எடுத்துவருகின்றது. நம் நாட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்கு சென்று கட்டணமில்லா கல்வி, உயர்கல்வி பயில வகை செய்துள்ளது. ஜப்பானில் வேலைவாய்ப்பும் அளிக்கின்றது. இவை மட்டுமன்றி, இந்தியா போன்ற நாடுகளில் தன்னாட்டு நிறுவனங்களை நிறுவி, இந்தியாவிலேயே பொருட்களை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது .
இந்நிலையில் ஜப்பானிய மொழி தெரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இந்தியாவில் மட்டும் சுமார் 2000 ஜப்பானிய நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் 577 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் தமிழ் நாட்டில் வசிக்கும் மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். உதாரணத்திற்கு நிசான்,இசுசூ, டொயோடா,தோஷிபா,ஹோண்டா,சுசூகி போன்ற நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதுமட்டுமன்றி , வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய மொழிபெயர்ப்பு போன்ற பகுதிநேர வேலை வாய்ப்புகளும் அதிகம்.
இதில் நல்ல செய்தி என்னவென்றால் இந்தியர்களுக்கு, முக்கியமாக தமிழர்களுக்கு ஜப்பானிய மொழிக்காற்றுக்கொள்ளுதல் மிகவும் எளிது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகின்றது. இரண்டு மொழிகளுக்கிடையே இருக்கும் இலக்கண மற்றும் சொற்றோடர் ஒற்றுமையே இதற்கு காரணமாகும். எனவே ஜப்பானிய மொழிக்கல்வியானது பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பட்டதாரிகள்,பகுதி நேர படிப்பு /வேலைக்கு செல்ல விரும்பும் பெண்கள் ஆகியோருக்கு மிகவும் உகந்தது என திரு ஸ்ரீராம் அவர்கள் கூறினார்.
திரு ஸ்ரீராம் அவர்களை அடுத்து ஜப்பானிய மொழி தன்வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதைப்பற்றி ஜப்பானிய ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உயரதிகாரியாக பணிபுரிந்து வரும் திரு .வெங்கடேஷ் அவர்கள் எடுத்துரைத்தார். அவரைத்தொடர்ந்து ஜப்பானிய மொழி பயின்று வரும் மாணவர்களும் தத்தம் அனுபவங்களைக்கூறி விழாவிற்கு வந்திருந்தவர்களை ஊக்குவித்தனர் .
வரும் அக்டொபர் 16-ஆம் தேதி முதல் கிழக்கு தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜப்பானிய மொழி வகுப்புகள் ஆரம்பிக்கின்றன.மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
காயத்ரி :
தொலைபேசி எண் : +919884244896
மின்னஞ்சல் முகவரி: gaya309.jayaraman@gmail.com