50 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மைல் கல்லை எட்டி சாதனை
-
சர்வதேச தரத்துடன் அதி உன்னத செயல்பாடு

ஆசியாவிலேயே மிகப் பெரிய மற்றும் மிகவும் நம்பகமான பல்நோக்கு மருத்துவமனை குழுமமான அப்பல்லோ மருத்துவமனைகள் நிறுவனம் (ஏஹெச்இஎல்) (பிஎஸ்இ : 508869) (என்எஸ்இ : APPOLLOHSP) 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. சர்வதேசத் தரத்துடன் உன்னத சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் இந்த புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளது. சிக்கலான பைபாஸ் அறுவை சிகிச்சைகள், வால்வு மாற்று சிகிச்சைகள், பீடியாட்ரிக் கார்டியாக் நடைமுறைகள், இதய மாற்று சிகிச்சைகள், குறைந்த ஊடுருவல் கொண்ட அறுவை சிகிச்சைகள் என பலதரப்பட்ட அறுவை சிகிச்சைகள் இந்த 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அடங்கும்.
பரவாத நோய்களில் மிகவும் ஆபத்தான நோயாக உள்ள இதய நோய்க்கு எதிராக போராடி வரும் அப்பல்லோ மருத்துவமனையின் செயல் தலைவர் டாக்டர் சி பிரதாப் ரெட்டி கூறுகையில், “தொற்றாத நோய்கள் இன்றைய காலத்தில் மிகவும் ஆபத்தான நோய்களாக உள்ளன. அவற்றில் இதய நோய் மிகவும் ஆபத்தானதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஒரு கோடியே எழுபது லட்சம் போ் இதய நோய்களால் மரணம் அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதய நோய்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இது மிகவும் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள விழிப்புணர்வு, தொடக்கத்திலேயே நோயைக் கண்டறிதல், தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளுதல் போன்றவை அவசியம் ஆகும். அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் சிகிச்சையில் முன்னோடியாக இருந்து மைல் கல்லை எட்டியுள்ள இந்தத் தருணம் எங்களுக்கு பெருமை வாய்ந்தது.” என்றார்.
அப்பல்லோவில் 80-களில் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி மற்றும் கார்டியாக் கேத்தடெரைசேஷன் ஆகியவை சிறப்பாக செய்யப்பட்டு அவற்றில் இந்த மருத்துவமனை முன்னோடியாகத் திகழந்தது. அதன் பின்னர் பல்வேறு நவீன மருத்துவ முன்னேற்றங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நோய் கண்டறியும் கருவிகள் பல வந்தன. இவை துல்லியமான நோய் கண்டறியும் திறனை வளர்த்ததுடன் சிறந்த சிகிச்சைக்கும் உதவியாக அமைந்துள்ளன. 320 ஸ்லைஸ் சிடி ஸ்கேனர், 64 ஸ்லைஸ் சிடி ஆஞ்சியோகிராபி, டிரான்சோசோஃபகேல் எகோ கார்டியோகிராபி, ஸ்ட்ரெஸ் எகோ கார்டியோகிராபி, எலெக்ட்ரோ பிசியாலஜி போன்றவற்றில் இருந்து தற்போது மூன்றாவது தலைமுறை கேத் லேப்கள், கார்டியாக் கிரிடிக்கல் கேர் யூனிட், அவசர சிகிச்சைப் பிரிவுகள் போன்றவை வரை முன்னேறி அப்பல்லோ மருத்துவமனை இதயப் பராமரிப்பில் முன்னணியில் உள்ளது. முதல் கரோனரி ஆர்டெரி ஸ்டெண்டிங், முதல் கீ ஹோல் மல்டிபிள் பைபாஸ் அறுவை சிகிச்சை, இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை போன்ற நவீன செயல்முறைகளை மேற்கொண்டு மைல் கல்களை எட்டிய சென்னை அப்பல்லோ மருத்துவமனை தற்போது 50 ஆயிரம் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது அந்த மருத்துவமனைக்கு மற்றுமொரு கிரீடம் ஆகும்.
அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமத்தின் இதய நோய்கள் அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் எம்ஆர் கிரிநாத் கூறுகையில், “அப்பல்லோ மருத்துவமனை, மிகச் சிறந்த அனுபவம் உள்ள, அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய இதய நோய் மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் சர்வதேசத் தரத்துடன் அதிநவீன சிகிச்சை நடைமுறைகளை வழங்கி வருகின்றனர். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் இதய நோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் என்ற முறையில், இதய நோய்களைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு அவசியம் என்பது எனது கருத்தாகும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் நல்ல வாழ்க்கை முறை ஆகியவற்றால் சிறந்த முறையில் இந்த தொற்றா நோயாக் கட்டுப்படுத்த முடியும்.” என்றார்.
சிகிச்சை முறைகளில் முன்னோடியாகத் திகழும் அப்பல்லோ மருத்துவமனையின் செயல்பாடுகளால் பல்லாயிரக்கணக்கான இதய நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. அதே சமயம் அப்பல்லோ மருத்துவமனை, உடல் நலப் பரிசோதனைகள் மூலம் இதய நோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை முயற்சியிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.
வருமுன் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து அப்பல்லோ மருத்துவமனாகள் குழுமத் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி கூறுகையில், “கார்டியோ வாஸ்குலர் எனப்படும் இதய ரத்த நாள நோய்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போதைய தேவை, இந்த நோய்களைத் தொடர்ந்து கண்காணித்து ஆபத்துக்கான காரணிகளை கட்டுப்படுத்திஸ குறிப்பிட்ட காலத்தில் முறையார பராமரிப்புகளை மேற்கொண்டு இதய நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். அப்பல்லோ மருத்துவமனையின் ஆரோக்கியமான இதய திட்டம் (ஹெல்த்தி ஹார்ட் புரோகிராம்) ஒவ்வொரு தனி நபரும் தங்களது இதய செயல்பாட்டுகளை கண்காணித்து பராமரிக்கலாம்.” என்றார்.
அப்பல்லோவின் ஹெல்த்தி ஹார்ட் புரோகிராம் திட்டம் தான் இந்தியாவின் முதல் இதய நோய்த் தடுப்புத் திட்டமாகும். ஆதாரப்பூர்மான அறிவியல் அடிப்படையிலான இந்தத் திட்டம் ஒவ்வொரு தனி நபரும் ஆபத்துக் காரணிகளைக் கண்டறிந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை நோக்கிச் செல்லலாம்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சைப் பிரிவின் பயணம்:
1983-ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை தொடங்கப்பட்ட 1983-ல் இருந்தே இத நோய் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஏட்ரியல் செப்டல் பாதிப்பிற்காக முதல் இதய அறுவை சிகிச்சை அப்பல்லோவில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனை, பல்வேறு வகையான இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்த மருதத்துவனையாகத் திகழ்கிறது. இதய நோய் மற்றும் இதயரத்த நாள அறுவை சிகிச்சைப் பிரிவில் நாளுக்குநாள் மேம்பட்டு வரும் நடைமுறைகளைப் பின்பற்றி ஒவ்வொரு நாளும் பல்வேறு நோயாளிகளுக்கு உயர்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பீட்டிங் ஹார்ட் சர்ஜரி எனப்படும் இதயம் துடிக்கும் போதே மேற்கொள்ளப்படும் சிக்கலான அறுவை சிகிச்சையை அப்பல்லோ மருத்துவனை 1997-ம் ஆண்டு தொடங்கியது. இது வரை அப்பல்லோ மருத்துவமனையில் 22, 300 பீட்டிங் ஹார்ட் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கரோனரி ஆர்டரி பைபாஸ் கிராஃப்டிங் (சிஏபிஜி) தொடர் நடைமுறையை இது மாற்றி அமைத்துள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனை, செல்விலாண்ட் கிளினிக்குக்கு சமமாக சிறப்பாக செயல்பட்டு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மற்றொரு முன்னோடி நடவடிக்கையாக ஆர்டெரியல் கிராஃப்டிங் உள்ளிட்ட “லிமா – ரிமா” ஒய் கிராஃப்டிங் அப்பல்லோவில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இளம் நோயாளிகளுக்கு பீட்டிங் ஹார்ட் சர்ஜெரி இந்த முறையின் மூலம் செய்யப்படுகிறது.
2007-ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் குறைந்த ஊடுருவல் கொண்ட இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வால்வு மாற்று சிகிச்சை, வயது வந்தோரில் பிறவி இதய நேயாளிகளாக உள்ளவர்கள் மற்றும் சிங்கிள் வெஸல் பைபாஸ் கிராஃப்டிங், ஆகியவை தோலில் 6 சென்டி மீடடர் அளவுக்கு சிறிய துளையிட்டு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த குறைந்த ஊடுவல் சிகிச்சை நடைமுறை ரோபோ உதவியுடனும் மேற்கொள்ளப்படுகிறது. பெரிய அசெண்டிங் ஆரோடிக் அனியூரிசம் ரிப்பேர் (பிரதான ரத்தக் குழாயில் அசாதாரண முறையில் பெரிதாவது) நோய்க்கு ஆரோடிக் வால்வு ரீப்ளேஸ் மென்ட் குறைந்த ஊடுருவல் கொண்ட சிகிச்சை முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனைகள் பற்றி….:
சென்னையில் 1983-ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை முதன்முதலாக டாக்டர் பிரதாப் ரெட்டியால் தோற்றுவிக்கப்பட்டது. இதுவரை அப்பல்லோ மருத்துவமனைகளில் இந்தியாவிலேயே அதிக அளவாக 1 லட்சத்து 60ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புற்று நோய் சிகிச்சை அளிப்பதில் அப்பல்லோ மருத்துவமனை உலகின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனையாக திகழ்கிறது. உறுப்பு மாற்று சிகிச்சை அளிப்பதிலும் இந்த மருத்துவமனை உலகில் முன்னணி மருத்துவமனையாகத் திகழ்கிறது.
ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிக நம்பகமான மருத்துவ குழும்மாக அப்பல்லோ குழுமம் திகழ்கிறது. தற்போது 64மருத்துவமனைகளில் 9834 படுக்கைகள் உள்ளன. 69 மருத்துவமனைகள், 3167 மருந்தகங்கள், 200 சிகிச்சை மையங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்களும் உள்ளன.150க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும் 150-க்கும் மேற்பட்ட அப்பல்லோ முனிச் இன்சூரன்ஸ் கிளைகளும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளன. மருத்துவ காப்பீடு உட்பட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை அப்பல்லோ வழங்கி வருகிறது. 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன. இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வு நிறுவனத்தில் உலக அளவிலான மருத்துவ சேவை சோதனை முயற்சிகள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் முறையாக ப்ரோடான் தெரபி மையத்தை ஆசியா, அப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி அப்பல்லோ மருத்துவமனை முன்னோடியாகத் திகழ்கிறது. இந்தியாவில் சென்னையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான இதயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அப்பல்லோ மருத்துவமனை அயராது பாடுபட்டு வருகிறது. ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான செலவில், சர்வதேசத் தரத்தில் தரமான ஆரோக்கியப் பராமரிப்பு சேவைகளை அப்பல்லோ வழங்கி வருகின்றது. அப்பல்லோ குழுமம், இதய ரத்தநாள (கார்டியோ வாஸ்குலர்) நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்தியாவில் முன்னோடியாகத் திகழ்கின்றன.
ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்பல்லோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது.
இந்திய அரசாங்கம் அப்பல்லோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்த்த்து இதுவே முதல் முறை.அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதில் அப்பல்லோ முன்னணி வகிக்கிறது. அப்பல்லோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது.
—————————————————————————————-