Director , Writer, K Subash passes away
இயக்குனர் சுபாஷ் சென்னையில் 23-11-2016 வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இதய கோளாறு காரணமாக காலமானர். அவருக்கு வயது 57. இவர் பராசக்தி, ரத்த கண்ணீர் படங்களை வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணன் பஞ்சு-வின் கிருஷ்ணனின் மகன் ஆவார். இவர் பவித்ரா ,சுயம்வரம்,123, நினைவிருக்கும் வரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்தி தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுபாஷ் -ற்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
அவர்களின் பெயர் தனுஜா , புனிதா. சுபாஷ் அவர்களின் மனைவியின் பெயர்
சுஜா சுபாஷ்.
இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகத்தினர் வந்த வண்ணம் உள்ளனர். இவரது உடல் 24-11-2016 பகல் 11மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.