Oviya as a celebrity judge

Oviya as a celebrity judge in COLORS Tamil dance reality show

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதன்முறையாக டான்ஸ் ரியாலிட்டிநிகழ்ச்சி அறிமுகம்
Oviya as a celebrity judge , Colors TV
Oviya as a celebrity judge , Colors TV

தனித்துவ அம்சங்களுடன் முற்றிலும் வேறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்க வேண்டுமென்ற தனது குறிக்கோளின்படி தமிழகத்தின் புதியதொலைக்காட்சி அலைவரிசையாக நுழைந்திருக்கிறது `கலர்ஸ் தமிழ்’. டான்ஸ் Vs டான்ஸ் என்ற பெயரில் முதல்முறையாக  ரியாலிட்டிநடன நிகழ்ச்சியை வழங்குவதில் பெருமைகொள்கிறது கலர்ஸ் தமிழ். இந்நிகழ்ச்சியின் நடுவராக சூப்பர்ஸ்டார் நகுல் கால்பதிக்கிறார்.அவருடன் தேசிய அளவில் புகழ்பெற்ற நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் மற்றும் செலிபிரிட்டி நடுவராக குறும்பும், உற்சாகமும்கலந்த திரைப்பட நட்சத்திரம் ஓவியா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் இணைகின்றனர். வரும் நவம்பர் 24-ஆம் தேதி  சனி மற்றும் ஞாயிறுஇரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சியை கீகீ, சாந்தனு மற்றும் முரட்டு சிங்கிள் மிர்ச்சி விஜய் உள்ளிட்ட தீவிர டான்ஸ்ஆர்வலர்கள் தொகுத்து வழங்குகின்றனர்.

இந்நிகழ்ச்சியை வசந்த்&கோ ஸ்பான்சர் செய்ய, நிப்பான் பெயிண்ட்ஸ் மற்றும் எஸ்கேஎம் பூர்ணா ரைஸ் பிராண்ட் ஆயில் ஆகியோர்சிறப்பு பார்ட்னர்களாக இணைகிறார்கள். 

கலர்ஸ் தமிழ் சேனலின் தலைமை அலுவலரான திரு. அனுப் சந்திரசேகரன் இதுகுறித்து பேசுகையில், “இன்றைய இரசிகர்கள் மற்றும்பார்வையாளர்களின் மனஓட்டத்திற்கு ஏற்றவாறு மாறுபட்ட நிகழ்ச்சிகளை வழங்குவதன் மூலம் கலர்ஸ் தமிழ் அதன் பயணத்தைத்தொடங்கியது. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகும், எங்களது இளம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாகஈர்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியை வழங்க வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம். அதன்படி  திறமைமிக்க நடன ஆர்வலர்களுக்கு ஒருதளத்தை வழங்குகிற  தனித்துவமான நிகழ்ச்சியாக `டான்ஸ் Vs டான்ஸ்’ இருக்கும் என நம்புகிறோம். தொழில்நுட்ப ரீதியாகவும்படைப்பாற்றல் ரீதியாகவும் இந்நிகழ்ச்சியானது, மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. பிருந்தா மாஸ்டர் மற்றும் நகுலின் வழிகாட்டலோடுதொகுப்பாளர்கள் கீகீ மற்றும் விஜயின் குறும்புமிக்க செயல்பாடுகள், பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் என்று நாங்கள் உறுதியாகநம்புகிறோம்.  வெற்றிகரமான  இக்கூட்டணியுடன் இணைந்து ஸ்பான்சர்களை வரவேற்பதுடன் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதில்மகிழ்கிறேன்” என்று கூறினார்.

மேலும், “ `டான்ஸ் Vs டான்ஸ்’ நிகழ்ச்சி பார்வையாளர்களின் பிரைம் டைம் பொழுதுபோக்குத் தேவையை நேர்த்தியாக உயர்த்தும்வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்க்கிறது. வழக்கமான நடன நிகழ்ச்சியின் வடிவத்திலிருந்து இந்நிகழ்ச்சி மாறுபட்டிருக்கும்.இதன் முக்கிய அம்சமாக ஒரே பாடலுக்கு இரு தனிநபர்கள்  டான்ஸ் வழங்குகிறார்கள். நடனமாடுபவர்களின் ஸ்டைல், நேர்த்தி மற்றும்நடன அமைப்பில் படைப்பாக்கத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இவர்களது நடனம் தீர்மானிக்கப்படும். இந்தப் போட்டியில்படிப்படியாக முன்னேற்றம் காணும்போது ஒவ்வொரு போட்டியாளரும் அரியணையில் அமர்வதற்கு தீவிரமாக போட்டியிடுவார்கள். இதுஅவர்களைப் பாதுகாப்பாக ஆக்குவதோடு, போட்டியில் முன்னேற்றம் காண்பதற்கு உதவும்.

Oviya as a celebrity judge
Oviya as a celebrity judge

சென்னை மட்டுமின்றி,  உலகெங்கிலுமிருந்து திறமைமிக்க கலைஞர்களை உலகறியச் செய்வதை நோக்கமாகக் கொண்டு ஒரு புதியபயணத்தைத் தொடங்குவதற்காக கலர்ஸ் தமிழ் சேனலுடன் கைகோர்ப்பது எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது” என்றும் கூறினார்.

திரைப்பட நடிகர் நகுல் இதுகுறித்து பேசுகையில், “தமிழ் தொலைக்காட்சி தளத்தில் ஒரு நிகழ்ச்சியின் நடுவராக முதன்முறையாககால்பதிப்பதில் நான் ஆர்வமும், உற்சாகமும் கொண்டிருக்கிறேன். பிருந்தா மாஸ்டர் போன்ற அனுபவமிக்க நாட்டிய நிபுணரோடுசேர்ந்து பங்கேற்பதற்கு கலர்ஸ் தமிழ் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இப்பயணத்தின்போது அதிகமான நடனஅசைவுகளைக் கற்றுக்கொள்ள நான் ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். இந்நிகழ்ச்சியின் வடிவமானது புதுமையானது. தங்களதுகற்பனைத்திறனை, புதுமையான சிந்தனையை வெளிப்படுத்தி நடன கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பை இது வழங்குகிறது. இதுவேவழக்கமான நடன நிகழ்ச்சிகளிலிருந்து இதனை வேறுபடுத்தி நிலை நிறுத்துகிறது. உலகெங்கிலுமிருந்து இதில் பங்கேற்கும்திறமைமிக்க நடனக்கலைஞர்கள் மீது ஒளிவெள்ளத்தைப் பாய்ச்ச கலர்ஸ் தமிழ் உருவாக்கியிருக்கும் சிறப்பான மாபெரும் மேடைஉண்மையிலேயே பாராட்டுக்குரியதாகும். ஏராளமான அற்புத தருணங்களோடு, குதூகலமும், உற்சாகமும் நிறைந்த இப்பயணத்தைமேற்கொள்ள நான் ஆவலோடு காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பங்கேற்பதற்குத் திறமைமிக்க பேரார்வம் கொண்ட போட்டியாளர்களைக் கண்டறியும் செயல்பாடானது, ஆகஸ்ட்மாதத்திலேயே தொடங்கப்பட்டது. 8-லிருந்து 45 வயதுக்குட்பட்ட பல்வேறு வயதுப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களிலிருந்து 70-க்கும் அதிகமானபங்கேற்பாளர்கள், தகுதிவாய்ந்த நடன நிபுணர்கள் அடங்கிய குழுவால் தேர்வுசெய்யப்பட்டனர்.

இந்த சேனலானது, அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் – டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555),ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து DTH தளங்களிலும்காணக்கிடைக்கிறது.
COLORS Tamil set to jazz up your telly time with the launch of first-of-its-kind dance reality show

Oviya as a celebrity judge , Colors TV
Oviya as a celebrity judge , Colors TV

~ Ropes in Vasanth & Co as the Presenting Sponsor and Nippon Paints and SKM PORNA RICE BRAN OIL as Special Partners~

~Get ready for dance dhamaka starting 24th November every Saturday and Sunday at 8:00 PM~

Keeping in line with its motto of offering differentiated content, COLORS Tamil, the youngest GEC in Tamil Nadu, is all set to launch its first-of-a-kind dance-off reality show, Dance Vs. Dance. This marks superstar Nakul’sforay into the Tamil television space as the judge of Dance Vs. Dance. He will be united by nationally acclaimed choreographer Brinda Master on the panel along with the very vivacious Oviya as a celebrity judge. Set to go on-air from 24th November 2018 at 8:00 PM, the show will be hosted by hard core dance enthusiasts, Kiki Shantanu and Murattu Single Mirchi Vijay.

Said, Mr. Anup Chandrasekharan, Channel Head – COLORS Tamil, “COLORS Tamil began its journey by offering content that resonates with the viewers of today. After the success of EngaVeetuMapillai, we wanted to come up with something that captures the attention of our young audience.  Dance Vs. Dance is aunique format that gives a platform to the brilliant talent pool that this State has to offer. The show has been very well shot creatively as well as technically. Under Brinda and Nakul’s guidance coupled withKiki and Vijay’s antics we are certain that the show will strike a chord with the viewers. I also take this opportunity to thank our Sponsors as together we hope to forge a successful partnership.”

Dance Vs. Dance is a unique dance face-off format curated to spruce up the primetime entertainment need of the viewers. The key element of this disruptive format entails a dance-off by two individuals on the same song. The duo will be adjudged basis their style, élan and creativity in choreography. As the competition progresses, each contestant will vie to be on the coveted ‘throne’ which will mark them safe and help them advance in the competition.
Commenting on Dance Vs. Dance, renowned choreographer Brinda Master said, “Tamil Nadu is a land of many celebrated dance forms. Dance is an integral part of the state that there is simply no celebration without us shaking a leg. It gives me great joy in joining hands with COLORS Tamil channel to begin a new journey that truly seeks to bring into limelight talented artists not just from the city, not just from the country but from across the globe. This is the first time we are going to be witnessing a dance-off reality show in Tamil TV space, which makes this journey all the more exciting and enthralling.”

Adding to this, Actor Nakul, said, “I am equally excited and curious to make my debut as a judge in Tamil Television space. COLORS Tamil has given me an opportunity to be alongside of a legendary dancer like Brinda Master from whom I am yearning to learn a few moves during this journey. The format of the show is innovative and it offers dancers an opportunity to showcase their creativity, which makes this show stand apart from the regular clutter. The grand stage curated by COLORS Tamil to shine the spotlight on talented dancers from across the globe is truly commendable. I am looking forward to a fun-filled journey with many, many exciting moments.”

The hunt for talented and passionate contestants began as early as August and over 70 participants were handpicked by a team of qualified professionals from across age categories starting from 8 to 45. Their love for dance and level of professionalism will exceed the expectations and help the show reach remarkable heights. The show will be spread across 13 weeks and telecast over the weekend in the prime time slot, 8:00 PM to 10:00 PM.

Let’s get your weekend pumped up with power packed dance performances in Dance Vs. Dance starting 24th November 2018 from 8:00 PM to 10:00 PM.  Catch all the sparkling performances and dynamism only on COLORS Tamil. The channel is available in all leading cable networks and on all DTH platforms – Sun Direct (CH NO 128), Tata Sky (CHN NO 1555), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) and Videocon D2H (CHN NO 553).