உலக பார்வை நாள் – விழிப்புணர்வு மனித சங்கிலி

உலக பார்வை நாள் – விழிப்புணர்வு மனித சங்கிலி

நாள். 13.10.2019 : நேரம் : காலை : 06:30 மணி

பார்வை பாதுகாப்பு குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உலக பார்வை நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதததில் இரண்டாவது வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு விழிப்புணர்வு மனித சங்கிலியை தமிழ்நாடு விழிஒளி ஆய்வாளர் நண்பர்கள் அமைப்பு, சென்னையில் உள்ள எல்லியட்ஸ் கடற்கரையில்  13.10.2019 (ஞாயிறுக்கிழமை); காலை : 06:30 மணி அன்று நடத்துகிறார்கள்.

மதிப்பிற்குரிய திரு நிதின் கட்கரி – மத்திய அமைச்சர்,சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் : இந்நிகழ்வு சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது பாராட்டுக்குரியது.இதற்காக இச்சபையின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். என்று தனது வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1000 மேற்பட்ட ஆப்டோமெட்ரி கல்வி நிலைய மாணவர்கள், கண் மருத்துவ நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

 இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக டாக்டர் சுஹாஸ் பிரபாகர் – மருத்துவ இயக்குநர் & துறைத் தலைவர் – கண் மருத்துவம் மற்றும் ஒளியியல்.,ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், போரூர், சென்னை மற்றும் கெளரவ விருந்தினராக டாக்டர் அசோக் ரங்கராஜன் – மருத்துவ இயக்குநர் – கண் மற்றும் சுகாதார பராமரிப்பு மையம்.,சங்கரா கண் மருத்துவமனை, பம்மல், சென்னை கலந்துக்கொள்ள உள்ளார்கள்.

Leave Your Comments