adeenam book release Tnagar

திறுமுறைக் கருவூலத்திலிருந்து – நூல் வெளியீட்டு விழா

திறுமுறைக் கருவூலத்திலிருந்து – நூல் வெளியீட்டு விழா
தருமபுர ஆதீன சமய பிரசார் நிலையம்
வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்

திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்து இனையதிபர் ஸ்ரீமத். சுந்திரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்களால் அருளிச் செய்யப்பட்டு 1914 நவம்பர் முதல் தினமலரின் இணைப்பிதழ்களில் ஒன்றான பக்திமலரில் ‘இந்த மாதச்சிந்தனை’ என்ற பகுதியில் வெளிவந்த கட்டுரைகள், “திறுமுறைக் கருவூலத்திலிருந்து” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு வெளிவரும் நூல் மலர் இது.

இந்த மலர் பரிபூரணமடைந்த ஸ்ரீமத் சுந்திரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் நினைவாக வெளியிடப்பட்டது.




இந்த நூலுக்கு ஆசியுரை அருளிய தருமையாதீனகர்த்தர் ஸ்ரீ-ல-ஸ்ரீ குரு மகாசந்நிதானம் அவர்கள்.
ஸ்ரீகாசிமடத்தின் இணையதிபராக விளங்கிய ஸ்ரீமத் சுந்திரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் 19-09-2016 சோமவாரத்தன்று நோன்பு அனுஷ்டித்து திருவலஞ்சுழி வினாயகப் பெருமானின் பிரசாதத்தை உட்கொண்ட நிலையில் பரிபூரணம் எய்தியதால் அவரின் ஆன்மவுடைய புனிதத்தை உணரலாம்.

ஸ்ரீமத். சுந்திரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடவூர் ஸ்ரீஅபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வர சுவாமி திருக்கோயில் திருமுறைப் பணி செய்த அமரர், திருமுறைக் கலாநிதி, சிவபூஜாதுரந்தரை தி.சாமிஐயா தேசிகர், திருமதி. ஞானாம்பாள் தம்பதியருக்கு 12-03-1953 அன்று மகவாக தோன்றினார்கள்.

இவர்கள் மயிலாடுதுறை ஏ.வி.சி. காலூரியில் பி.எஸ்.சி பட்டம் பெற்றவர். இந்திய ரயில்வே பணித் தேர்வணையத்தால் தேர்வு செய்ய பெற்று, தென்னக ரயில்வே கோட்ட அலுவலத்தில் 1975 முதல் 1995 வரை இருபது ஆண்டுகள் கண்காணிப்பாளராக பணிசெய்து, தன்னார்வப் பணி ஓய்வுபெற்றப்பின், 1996 ஆம் ஆண்டு தருமையாதீனத்தில் அடியவராகச் சேர்ந்து ஸ்ரீ-ல-ஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாசியால் துறவுபூண்டார்கள்.
தென்னாப்பிரிக்கா, சீசல்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இலங்கை முதலிய பல நாடுகளுக்குச் சென்று நூற்றுக்கும் மேற்பட்ட சமய பரப்புரை நிகழ்த்திய்ள்ளார்.
கயிலை மாமுனிவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் கயிலாய யாத்திரை மேற்கொண் டார்.




2004 முதல் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் பூசைத் தம்பிரானாக இறைபணியாற்றிய இவர்கள், 2009-ஆம் ஆண்டு ஸ்ரீகாசிமடம் அதிபர் கயிலைமாமுனிவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்களால் இணையதிபராக நியமிக்கப் பெற்று, சமயபணிகளையும், ஆட்சிபணிகளையும் செவ்வனே செய்து வந்தார்கள்.
ஸ்ரீமத். சுந்திரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் திருமுறைப் பாராயணம், ஆன்மார்த்த பூஜை முதலிய ஆன்மீகக் கடமைகளை வழுவாமற் செய்துவந்தார்; நேர்மை, எளிமை, தூய்மை, வாய்மை முதலிய பண்புகளுடன் விளங்கினார். கணிணி இயக்கத்திலும் வல்லமையுடன் விளங்கினார்.





அலுப்போ சலிப்போ அடையாமல் வாரணாசி குமாரசுவாமி மடத்தில் தங்கி அவர் செய்த முன்னேறபணிகள் மற்றும் தமிழத்திலும், பாரத்ததின் பிற மாநிலங்களிலும், பிற பல நாடுகளிலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் சைவசமய சாத்திர தோத்திர இலக்கியப் பரப்புரைகள், தொடருரைகள் பல நிகழ்த்தினர்.

திருமுறைப் பனுவல்களைப் பண்ணொன்றக் கனத்த குரல் வளத்துடன் உருகிப்பாடும் திறன் உடையவர்.
இத்தகு சிறப்பியல்புகளுடன் விளங்கிய ஸ்ரீமத். சுந்திரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகளின் இனிய கட்டுரைகளைத் தொகுத்து, அவர்த்ம் நினைவைப் போற்றும் வகையில் பொன்மலராக வெளிடப்பட்டது…………………………………..