ஆட்டோவில் தவறவிட்ட தங்க நகைகள்அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, தேனாம்பேட்டையில் வசித்து வரும் திருமதி.விஜயலட்சுமி, வ/46 என்பவர் கடந்த 31.10.2019 அன்று மாலை தேனாம்பேட்டை, மார்கெட் அருகே TN-09-BD-4725 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோவில் ஏறி சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இறங்கிய போது 25 சவரன் தங்க நகைகள் கூடிய கட்டை பையை ஆட்டோவில் தவரவிட்டதாக R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
மேற்படி ஆட்டோ ஓட்டுநர் திரு.ஆர்.உதயகுமார் வ/46, த/பெ.ரத்தினம், தி.நகர், சென்னை என்பவர் மேற்படி பயணியை இறக்கி விட்டு சிறிது தூரம் சென்ற போது ஆட்டோவின் பின் இருக்கையின் கீழ் இருந்த பையை எடுத்து பார்த்த போது அதில் தங்க நகைகள் இருப்பதைகண்டு பெண் பயணியை இறக்கி விட்ட முகவரிக்கு வந்து விஜயலெட்சுமியிடம் பத்திரமாக 25 சவரன் தங்க நகைககள் அடங்கிய பையை பத்திரமாக ஓப்படைத்தார்.
ஆட்டோவில் பயணி தவறவிட்ட 25 சவரன் தங்க நகைகளை கூடிய பையை நேர்மையான முறையில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் திரு.ஆர்.உதயகுமார் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் (02.11.2019) இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Congrats driver Sir .. Hats off to commissioner sir for felicitating . This kind of drivers should be awarded and recognized .
வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும் உங்கள் பணி