Students_demonstrating_experiments

Omega Healthcare with Agastya International Foundation gifts Science Centre

சென்னை அசோக்நகரில் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் , புத்தாக்க அறிவியல் மையம்!

 அகஸ்தியா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் உடன் இணைந்து வழங்கிய  ஒமேகா ஹெல்த்கேர் !  

  • ஒரு ஆண்டில் ஏறக்குறைய 10,000 பரிச்சய அனுபவங்களோடு இச்செயல்திட்டத்தின் மூலம் சுமார் 1400 இளம் மாணவிகள் பயனடைவார்கள்.
  • திருச்சியில் வெற்றிகரமான அமலாக்கத்திற்குப் பிறகு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவியல் மையமானது, இம்மாநிலத்தில் அகஸ்தியா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் உடன் இணைந்து ஒமேகா செயல்படுத்துகின்ற இரண்டாவது செயல்திட்டமாகும்

2018 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் திருச்சி மாநகரில், அகஸ்தியா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஒத்துழைப்போடு முதல் அறிவியல் மையத்தை வெற்றிகரமாக அமைத்து, அறிமுகம் செய்ததற்குப் பிறகு, சென்னையில், அசோக்நகரில் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில்அறிவியல் மையத்தை’ ஒமேகா ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், அமைத்துருவாக்கி இன்று தொடங்கியிருக்கின்றது.

ஒமேகா மற்றும் அகஸ்தியா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் நிதியுதவியோடு அமைக்கப்பட்டிருக்கும்.  இந்த அறிவியல் மைய பரிசோதனையகமானது, பல்வேறு அறிவியல் கருத்தாக்கங்களின் பயன்பாட்டை மனதில் இருத்திக் கொள்வதற்கு மாணவர்களை ஏதுவாக்கும்.  அத்துடன், கற்றல் செய்முறையை மகிழ்ச்சிகரமான ஆர்வமூட்டும் செயல்பாடாக இது மாற்றும்.  நேரடியாக செய்முறைக் கல்வி வழியாக, குழந்தைகள் மத்தியில் ஆர்வத்தை தூண்டவும் மற்றும் படைப்பாக்கத்திறனை வளர்த்தெடுக்கவும் அறிவியல் ரீதியாக இந்த பரிசோதனையகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வேதியியல், இயற்பியல், உயிரியல், சூழலியல் மற்றும் வானவியல் ஆகியவற்றில் ஏறக்குறைய 150-க்கும் அதிகமான அறிவியல் செய்முறைப் பயிற்சிகளையும் மற்றும் மாதிரிகளையும் இது கொண்டிருக்கிறது.

Omega Healthcare
L-R Mr.Ramji Raghavan, Founder-Chairperson, Agastya Foundation, Mr.Gopi Natarajan, Co-Founder & CEO,Omega Healthcare and Mr.S.V.Krishnan, Chief Operating Officer, Omega Healthcare

ஒமேகா ஹெல்த்கேர் -ன் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலரான திரு. கோபி நடராஜன் இச்செயல்திட்டத்தை அறிமுகம் செய்து பேசுகையில், “தொழில்துறையானது அதிவேகமாக மாறிவருகின்ற நிலையில், வலுவான மற்றும் திறன்மிக்க பணியாளர்களை அவர்களது குழந்தைப் பருவத்திலிருந்தே அடிப்படை அம்சங்களில் அறிவார்ந்தவர்களாக உருவாக்குவது இத்தருணத்தின் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.  திருச்சியில் எங்களது முதல் அறிவியல் மையத்தின் வெற்றியைத் தொடர்ந்து அகஸ்தியார் உடன் இணைந்து, ஒமேகா நிறுவனத்தால் சென்னையில் செயல்படுத்தப்பட்டிருக்கும் இந்த முனைப்புத் திட்டமானது, குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்குவதற்கு உதவுமாறு உருவாக்கப்பட்டிருக்கிறது.  அவர்களது நடைமுறை யதார்த்த அறிவை உயர்த்துவதற்கு சமீபத்திய சாதனங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு அவர்களை பரிச்சயப்படுத்துவதன் மூலம் இதை செயல்படுத்த முடியும்.” என்று கூறினார்.

2018 ஆம் ஆண்டு, ஜுலை மாதத்தில் திருச்சியில் நிறுவப்பட்ட முதல் அறிவியல் மையமானது, பிரமிக்கத்தக்க வரவேற்பை பெற்றிருக்கிறது.  ஒட்டுமொத்தமாக ஓராண்டில் 306 ஆசிரியர்கள் மற்றும் 11,970 மாணவர்கள் இம்மையத்திற்கு வருகை தந்து, தங்கள் அறிவியல் திறனை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.  கடந்த காலாண்டில் மட்டும் 52 பள்ளிகள் இம்மையத்திற்கு வருகை தந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த கூட்டாண்மை செயல்பாடு குறித்து பேசிய அகஸ்தியா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் (AIF) நிறுவனரும், தலைவருமான திரு. ராம்ஜி ராகவன், “ஆ! ஆஹா! ஹா – ஹா!” என்ற உற்சாக உணர்வை பரப்புவதற்கு தமிழ்நாட்டில் தங்களது ஆதரவு செயல்பாட்டை ஒமேகா ஹெல்த்கேர் விரிவாக்கம் செய்து வருவது எங்களுக்கு கிடைத்திருக்கும் அதிஷ்டம் மற்றும் கௌரவமாகும்.  “ஆ” என்பது, உற்சாகத்தை தூண்டிவிடுகிற, எதிர்பார்க்காத மற்றும் எதிர்-உள்ளுணர்வு அனுபவங்களின் வழியாக நிகழ்கிறது.  “ஆஹா” என்பது, கேள்விகள் கேட்பது, புலனாய்வு செய்வது, பரிசோதனை செய்வது மற்றும் கண்டறிவது ஆகியவற்றின் விளைவாக கிடைக்கக்கூடியதாகும்.  “ஹா – ஹா” என்பது, கற்றலில் மகிழ்ச்சியையும், அச்சம் குறைந்திருப்பதையும், தக்கவைப்பு மற்றும் செயல்திறனில் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.  இளம் குழந்தைகள் மனதில் படைப்பாக்கத் திறனை தூண்டிவிடவும் மற்றும் ஆக்கத்திறன் உள்ள உலகை கட்டமைக்கவும் எங்களுக்கு இக்கூட்டாண்மை உதவும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.  அடிப்படை களஅளவில் பல்வேறு முனைப்புத்திட்டங்களின் வழியாக சமூக வாழ்க்கைத் தரநிலைகளை முன்னேற்றுகின்ற குறிக்கோளுக்காக ஒமேகா ஹெல்த்கேர் அதிக முனைப்போடு செயலாற்றி வந்திருக்கிறது.  மக்களுக்காக ஒரு சிறப்பான எதிர்காலத்தை கொண்டு வருவதில் இச்செயல்பாடு மற்றுமொரு நடவடிக்கையாகும்,” என்று குறிப்பிட்டார்.

Omega_Healthcare
L-R Mr.Gopi Natarajan, Co-Founder & CEO,Omega Healthcare, Mr.Thiru.R.Sudalaikannan, State Project Director,Education Department and Mr.S.V.Krishnan, Chief Operating Officer, Omega Healthcare

ஓமேகா ஹெல்த்கேர் குறித்து :

இந்தியாவில் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் அவுட்சோர்சிங் சேவைகள் துறையில் முன்னணியில் இருந்துவரும் ஓமேகா ஹெல்த்கேர் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ்; 2004-ம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இன்றைக்கு இந்தியாவில் பெங்களுரு சென்னை; திருச்சி; பீமாவரம் மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் மற்றும் பிலிப்பைன்ஸ் மணிலா மற்றும் சிபு ஆகிய நகரங்களிலும் இது அலுவலகங்களைக் கொண்டு சேவையாற்றி வருகிறது. வழங்குநர் மற்றும் உடல்நல பராமரிப்பு தீர்வுகள், பணம் செலுத்தநருக்கான தீர்வுகள், ஃபார்மா தீர்வுகள், பகுப்பாய்வு தீர்வுகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப தீர்வுகள் தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனங்களுக்கு உயர்நிலையிலான மதிப்பு உந்துதல் பணிகளை ஓமேகா கையாள்கிறது. தற்போது இந்நிறுவனம் 14,000-க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டிருக்கிறது மற்றும் பல்வேறு சமூகநல நோக்கங்களுக்காக நன்கு அறியப்பட்ட அரசுசாரா தொண்டு நிறுவனங்களோடு இது இணைந்து செயல்பட்டு வருகிறது.  www.omegahms.com

அகஸ்தியா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் குறித்து

1999-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறுவப்பட்ட அகஸ்தியா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன், அரசு பள்ளி ஆசிரியர்களுக்காகவும் பொருளாதார ரீதியாக வசதி குறைவான குழந்தைகளுக்காகவும், உலகின் மிகப்பெரிய நடமாடும், நேரடி அனுபவ அறிவியல் கல்வித்திட்டங்களுள் ஒன்றை நடத்தி வருகிற, இலாபநோக்கற்ற கல்வி அறக்கட்டளை அமைப்பாகும். இதன் அனைத்து செயல்திட்டங்கள் வழியாக இந்தியாவில் 21 மாநிலங்களில் 2,50,000 ஆசிரியர்கள் மற்றும் 12 மில்லியனுக்கும் அதிகமான இளம் மாணவர்களை அகஸ்தியா சென்றடைந்திருக்கிறது.  செயல்முறை பயிற்சிகளின் வழியாக நேரடியான அறிவியல் கல்வியை கிராமப்புற அரசு பள்ளிகள் பெறும்படி செய்வதன் மூலம், கிராமப்புறங்களைச் சேர்ந்த வசதி குறைவான குழந்தைகளின் சிந்தனையை தூண்டவும் மற்றும் அவர்களின் அறிவுத்திறனை பெருக்கி மேம்படுத்தவும் அகஸ்தியா தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.  http://www.agastya.org

Students_demonstrating_experiments
Students_demonstrating_experiments