Site icon Newspapers Chennai

Disabled artists honored

prallel music fest 2016

prallel music fest 2016

Disabled artists honored

Parallel Music Festival 2016

பாரலெல் மியூசிக் விழா 2016 – மாற்றுத் திறனாளி கலைஞர்கள் கௌரவிப்பு

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கோரமண்டல் நடத்தும் – 12வது வோடஃபோன் ரோட்டரி – “பாரலெல் மியூசிக் விழா” மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் நிகழ்ந்தது. மாற்றுத் திறனாளி கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வருடா வருடம் இவ்விழாவை ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கோரமாண்டல் நடத்தி வருகிறது. இம்முறை கடம் வித்வான் திரு சுரேஷ் வைத்தியநாதன் அவர்களுக்கு “சிறந்த மாற்றுத் திறனாளி கலைஞர்” விருதும், கர்நாடக
இசைப் பாடகர் திரு காரைக்கால் ஆர். ஜெய்ஷங்கர் அவர்களுக்கு வளர்ந்துவரும் “நம்பிக்கைக்குரிய மாற்றுத் திறனாளி கலைஞர்” எனும் விருதும் வழங்கப்பட்டன.




நிகழ்ச்சியில், திரு. என். முரளி, இணை தலைவர், கஸ்தூரி அண்ட் சன்ஸ், திரு.
விவேக் ஜெயின், தலைவர், சேல்ஸ் & மார்க்கெட்டிங், வோடஃபோன், கர்நாடக
இசைக்கலைஞர் திரு டி வி. கோபாலகிருஷ்ணன், திரு. பி. எஸ். ஸ்ரீகுமார், தலைவர், ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கோரமண்டல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் பத்மஸ்ரீ கன்னியாக்குமாரி – வயலின், திரு. அணில் ஸ்ரீநிவாசன் – பியானோ மற்றும் திரு. பத்ரி சதிஷ்குமார் – மிருதங்கம், ஆகியோரின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. தொடர்ந்து கடம் வித்வான் சுரேஷ் வைத்யநாதனின் “ம்ரிதிக்க வைபவம்” குழுவின் இசைக்கச்சேரி நடைபெற்றது.




டிசம்பர் மாத கச்சேரி சீசனில் மாற்றுத்திறனாளி கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவும், அவர்களை ஆதரித்து அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கோரமண்டல் இந்த பாரலெல் மியூசிக் விழாவை கடந்த 12 வருடங்களாக நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கோரமண்டல் கிளப் ஆதரவுடன் செயல்பட்டுவரும்
பார்வையற்றோர் மேம்பாட்டு அமைப்பான “கர்ண வித்யா”–விலிருந்து பல
மாற்றுத்திறனாளிகளும் இன்னிசையைக் கேட்டு மகிழ்ந்தனர்.

prallel music fest 2016




Exit mobile version