kajal agarwal

Kavalai Vendam

Kavalai Vendam
As the tough times of Reformation is on the full swing all that an average audience has to believe is in the concept of ‘Don’t Worry be happy’.
“Kavalai Vendam” is a perfect foil on this concept. producer Elred Kumar on  behalf of his  banner RS Infotainment takes it as a moral responsibility to entertain the audience with  Deekay, the Director who had earlier directed “Yaamirukka Bayamey”.  KAVALAI VENDAM has Jiiva – Kajal Agarwal in the lead roles and Sunaina, RJ Balaji, Mayilsamy, Balasaravanan, Manobala, Shruthi Ramakrishnan, Madhumitha and Manthra in the pivotal roles. After receiving positive acclaims for his Horror – Comedy ‘Yaamiruka Bayamey’, Director Deekay is now back with ‘Kavalai Vendam, which is all set-to hit the screens from 24th November.
“Normally three concepts in a film will pull the youngsters to the screens. Youthful songs, Don’t worry be happy concept and  colourful picturizations. Our Kavalai Vendam is fully packed with these three concepts and we are pretty sure that the film will be a complete youth entertainer. Thanks to Producer Elred Kumar sir for his sustained support and open freedom, right from my first film Yaamiruka Bayamey.




I must say that Jiiva sir has lived in his character. He is evolving as one of the most successful stars in Tamil Film Industry, because of his dedication level. Likewise Kajal Agarwal has added new colours to our KAVALAI VENDAM. Her commitment and passion towards the profession is only landing her in projects with Ajith sir and Vijay sir.
Music is the perfect curtain raiser for a youthful film. In that case Music Director Leon James has come out with some fabulous melodies that will go a long way in according a great reception to the film.  I can comfortably say that the visuals of our  KAVALAI VENDAM will make the Audience to fall in Love, and the creator for those colourful visuals is our Cinematographer Abinandhan Ramanujam. His visual sense Match the music of leon, youthful exuberance of the lead pair Jiiva and Kajal.
We have the most happening RJ Balaji and Bala Saravanan to tickle the laughing bones.It is a UA for this film . Un limited Attention. What better option for the youth than celebrating the arrival of a winter with  “Kavalai Vendam”  says Director Deekay in a confident note.






“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’  
வாழ்க்கை என்பது மிக சிறியது…. அதை எந்தவித கவலையும் இன்றி வாழ்வதே சிறப்பு…. என்ற மைய கருத்தை கொண்டு உருவாகி இருப்பது தான் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, ‘யாமிருக்க பயமே’ புகழ் டீகே இயக்கி இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம். ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  ‘யாமிருக்க பயமே’ படம் மூலம் பெருமளவு பாராட்டுகளை பெற்ற இயக்குநர் டீகே இயக்கி இருக்கும் கவலை வேண்டாம் திரைப்படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.




“மனதை மயக்கும் பாடல்கள், கவலை இல்லாமல் வாழ வேண்டும் என்ற மைய கருத்து மற்றும் கண்களை கவரக்கூடிய எழில் மிகு காட்சிகள்…. இவை மூன்றும் ஒரு திரைப்படத்தில் இருக்குமானால், நிச்சயமாக அது இளம் ரசிகர்களின் மனதை வெல்லும். அப்படி ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பது தான் எங்களின் ‘கவலை வேண்டாம்’. என்னுடைய முதல் படமான ‘யாமிருக்க பயமே’ திரைப்படத்திலும் சரி, தற்போது உருவாகி இருக்கும் கவலை வேண்டாம் படத்திலும் சரி, எனக்கு முழு சுதந்திரத்தை தந்திருக்கிறார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார்….அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
ஜீவா சார் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார் என்பதை நான் சொல்லியே ஆக வேண்டும்…தமிழ் திரையுலகில் ஒரு வெற்றிகரமான நட்சத்திரமாக அவர் வலம் வந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம், நடிப்பிற்காக தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் அவருடைய குணம் தான். அதுமட்டுமின்றி, எங்களின் கவலை வேண்டாம் படத்திற்கு தன்னுடைய அசாத்திய நடிப்பால் புதியதொரு வண்ணம் தீட்டி இருக்கிறார் காஜல் அகர்வால். நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வமும், காதலும் தான் அவரை அஜித் சார், விஜய் சார் போன்ற தலைச் சிறந்த நட்சத்திரங்ளின் திரைப்படங்களில் பணியாற்ற செய்திருக்கிறது.
ஒரு தரமான திரைப்படத்திற்கு நல்லதொரு துவக்கமாக அமைவது, அந்த படத்தின் பாட்லகள் தான். அந்த வகையில் கவலை வேண்டாம் படத்திற்காக இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்து தந்த பாடல்கள் அனைத்தும், இளம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு முழு காரணம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் தான்…. அதே போல், கவலை வேண்டாம் படத்திற்காக ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் உருவாக்கி இருக்கும் ஒவ்வொரு எழில் மிகு காட்சிகளும் ரசிகர்களின் உள்ளங்களில் காதலை விதைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.   அவருடைய வண்ணமயமான காட்சிகளும், லியோன் ஜேம்ஸின் மனதை வருடும் இசையும், ஜீவா – காஜல் அகர்வால் நடிப்போடு  மிக  அற்புதமான முறையில் ஒன்றிணைந்து இருக்கிறது.
ஆர் ஜே பாலாஜி மற்றும் பால சரவணனின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் என்பதை உறுதியாகவே சொல்லுவேன்….நிச்சயமாக ஒவ்வொரு இளைஞர்களும் கொண்டாடும் திரைப்படமாக எங்களின் கவலை வேண்டாம் இருக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் டீகே.