SAITHAN MOVIE
“The Demon (SAITHAN) will play a angelic role in my career…” says Arundhati Nair
Pairing opposite to a demon in acting (Vijay Antony) is not that much easy. It must require skilled talents and high level of dedication, which has been perfectly carried out by the pretty actress Arundhati Nair, the female lead of SAITHAN. Hailed from God’s own country – Kerala, the charming actress is now all set to skip the hearts of audience by her varied performance through the December 1st releasing movie SAITHAN. Produced by Fatima Vijay Antony under the banner Vijay Antony Film Corporation, the most anticipated psychological thriller SAITHAN is directed by debutante Pradeep KrishnaMoorthi.
“For the very first time in the history of man kind, the entire Tamil and Telugu Audience is eagerly waiting to welcome the Saithan…” starts Arundhati Nair, who holds a degree in commerce in a brisk tone.
“I never thought that a unleashed demon(SAITHAN) aroused from Death Valley would have play this much angelic role in my film career. Thanks to Vijay Antony sir for having confidence in me and picking me up for this story. I Can proudly say that SAITHAN has given me the opportunity to prove my skills and talents through a powerful character called Aishwarya.
Above all vijay Antony sir has given me the chance to dub in my own voice, which most of the actresses may not get that opportunity in their start up level films. SAITHAN may look like simple, silent and humble, but the audience will come to know about the real play of the demon from 1st December….” concludes Arundhati Nair in a husky tone.
“என் திரையுலக கனவை பூர்த்தி செய்த தேவதை, சைத்தான்….” என்கிறார் அருந்ததி நாயர்
நடிப்பு தான் உலகம், நடிப்பு தான் வாழ்க்கை என்று ஒரு நடிப்பு வெறி கொண்ட சைத்தானாகவே மாறி இருக்கும் விஜய் ஆண்டனியோடு இணைந்து பணியாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு கடின உழைப்பும், முழு அர்ப்பணிப்பும் தேவை. அந்த குணங்களோடு சைத்தான் திரைப்படத்தில் களம் இறங்கி, தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார், கேரளாவில் இருந்து உதயமாகி இருக்கும் கதாநாயகி அருந்ததி நாயர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்து, சைக்கோலாஜிக்கல் – திரில்லர் பாணியில் அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கும் சைத்தான் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.
“மனித வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ‘சைத்தான்’ னை வரவேற்க ஒட்டுமொத்த தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் காத்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் இந்த ‘சைத்தான்’ , எனக்கு தேவதை……” என்று மெல்லிய புன்னகையோடு துவங்குகிறார் வணிகவியல் பாடத்தில் பட்டம் பெற்று இருக்கும் அருந்ததி நாயர்
“என் மீது நம்பிக்கை வைத்து, என்னை சைத்தான் படத்திற்காக தேர்ந்தெடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ‘ஐஸ்வர்யா’ என்னும் வலுவான கதாபாத்திரம் மூலம் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை பெற்று தந்திருக்கிறது சைத்தான் என்பதை நான் பெருமையாக சொல்லுவேன்….
பொதுவாகவே வளர்ந்து வரும் பிற மொழி பேசும் கதாநாயகிகளுக்கு, அவர்களின் சொந்த குரலில் டப்பிங் செய்வதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை…..ஆனால் விஜய் ஆண்டனி சார் என்னை என்னுடைய சொந்த குரலிலேயே சைத்தான் படத்தில் பேச செய்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….. சைத்தான் பார்ப்பதற்கு சாதுவாகவும்,எளிமையாகவும் இருக்கலாம், ஆனால் வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அந்த ‘சைத்தான்’ னின் உண்மையான அவதாரத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்….” என்று மிரட்டும் தோரணையில் கூறுகிறார் அருந்ததி நாயர்.