தாம்பரம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3,02,000/- பணத்தை எடுத்து நேர்மையாக தாம்பரம் சரக உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்த நபரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, மேற்கு தாம்பரம், காமராஜர் தெருவில் வசித்து வரும் திரு.சி.மதன்ராஜ்ஜெயின், வ/58, த/பெ.சம்பாலால் என்பவர் கடந்த 31.10.2019 மதியம் 03.15 மணியளவில் தனது வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப கடைக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய். 3,02,000/- (2000 ரூபாய் தாள்கள்) எடுத்துள்ளார். பின்னர் பணத்தை தவறவிட்ட நபர் வருவார் என்று தனது கடையில் பணத்துடன் காத்திருந்ததாகவும், யாரும் உரிமைகோரி வராத காரணத்தால் மறு நாள் (01.11.2019) மதியம் ரூ.3,02,000/- பணத்தை நேர்மையாக தாம்பரம் சரக உதவி ஆணையாளர் திரு.அசோகன் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். தாம்பரம் போலீசார் பணத்தை தவறவிட்ட நபர் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
மேற்படி சாலையில் கிடந்த பணத்தை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த திரு.சி.மதன்ராஜ்ஜெயின் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்,திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Leave Your Comments