Visually challenged Commonwealth JUDO TN Champions 2019
இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்ஹாமில் நகரில் 25.09.2019 அன்று நடந்த *அகப் பார்வையாளர்களுக்கான காமன்வெல்த் ஜூடோ போட்டியில் இந்தியா சார்பில் 20 நபர்கள் கலந்து கொண்டார்கள் அதில் 3 பேர் தமிழர்கள்,* அந்த மூன்று பேரும் பதக்கங்களுடன் செப் 29 அன்று இரவு சென்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தார்கள், அவர்களை லிட் தி லைட் (Lit The Light) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பரத் மற்றும் பொறுப்பாளர்கள் ராம், சுரேந்தர், தோழன் அமைப்பு ஆகியோர் வரவேற்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
20 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில், தமிழ்நாடு சார்பில் சென்ற *மனோகர் 73 கிலோ பிரிவில் மற்றும் சுபாஷினி 44 கிலோ பிரிவிலும் தங்கம் வென்றுள்ளனர், முத்துலட்சுமி 47 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கம்*
இவர்கள் போட்டியில் பங்கேற்க பயிற்சியாளருக்கு மட்டும் போக்குவரத்து செலவு தமிழக அரசு பொறுப்பேற்ற நிலையில் போட்டியாளர்கள் மூவருக்கும் சென்று வருவதற்கான அனைத்து செலவுகளையும் லிட் த லைட் அமைப்பு, அகல் அமைப்பு மற்றும் சில தொண்டு நிறுவனங்களும் முழு செலவையும் ஏற்று கொண்டனர்.
*கோரிக்கை:*
- அரசு உலக அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட வேண்டும்
- நிறைய அகப்பார்வையாளர்கள் பயன்படும் வகையில் அவர்களுக்கான விளையாட்டு திடல், பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்
- தற்போது பதக்கம் பெற்ற இவர்கள் வரவிருக்கும் பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற இருப்பதால் அவர்களுக்கான உபகரணங்கள் வழங்க வேண்டும்
தொடர்புக்கு: பரத் 9894949878/ ராம் 8056207601. *லிட் தி லைட்*
Leave Your Comments