மண்டலாபிஷேகம்

மண்டலாபிஷேகம்

மண்டலாபிஷேகம்

ஸ்ரீ பைரவசாயி திருக்கோவிலில் 03-11-19 அன்று வெகு விமரிசையாக நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றுவருகிறது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 45. நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்ய மண்டலாபிஷேகம் அவசியம். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல் மண்டலாபிஷேகம் எனப்படும்.

மண்டலாபிஷேகத்தின்போது ஸ்ரீ ஷீர்டி சாய்பாபாவிற்கு தினமும் சிறப்பு அபிஷேகமும் பிரதி குருவாரங்களில் (வியாழக்கிழமைகளில்) பூர்வ ஜென்ம பாபங்கள் தீர, சகல தோஷ நிவர்த்தி பெற, ஸ்ரீ சாய் கர்ம விமோசன ஹோமமும் நடைபெறுகிறது.

மண்டலாபிஷேக வைபவத்தில் கலந்தது கொண்டால் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பலனை விட பலமடங்கு பலன் பெறலாம் என புராணங்கள் கூறுகின்றன. எனவே இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ சாய் அருளுக்கு பாத்திரமாகிறார்கள்.

மண்டலாபிஷேகம், ஹோமம், போன்றவற்றில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பத்தகோடிகள் கிழ் காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 91765 66648 , 94459 00072. Land line 22476833.

 Shri Bhairavasai Temple Trust, 6 – Barath Nager Main, Madipakkam – Chennai – 600091

Leave Your Comments