Yuvaa 2020 at Asan Memorial College of Arts & Science
ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டுப் பல்வேறு கல்லூரிகளுக்கிடையேயான கலை போட்டிகள் “யுவா 2020” 24.01.2020 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு தமிழ்நாடு மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.S. ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பல்வேறு கல்லூரிகளுக்கிடையேயான மாணவ – மாணவர்கள் பங்கு பெறும் (குழு நடனம், குழுப்பாடல், இசை கச்சேரி, காய்கறி கலைநயம், மாத்தி யேசி, மணமகள் அலங்காரம் போன்ற பல வகையான) 14 வகையான போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் 45 கல்லூரிகளிலிருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர்கள் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் இசையமைப்பாளர் பிரபல வளர்ந்து வரும் தமிழ் நடிகருமான ஹிப் ஆப் தமிழா ஆதி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார். அனைத்துப் போட்டிகளிலும் அதிக புள்ளிகள் எடுத்த எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி மாணவர்களுக்குச் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
Leave Your Comments