Annual Sports Day of Vedanta Academy
வானகரத்தில் அமைந்துள்ள வேதாந்தா பள்ளியில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பான முறையில் விளையாட்டு தினவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு 25-1-2020 (சனிக்கிழமை) இன்று காலை மூன்றாம் ஆண்டு விளையாட்டு தினவிழா சிறப்பு விருந்தினர்களான திரு. ஜர்ங்கிட் (தமிழ்நாடு காவல் துறை), திரு. மணிகண்டன் (இந்திய குத்துச்சண்டை வீரர்) இவர்களின் தலைமையில் காலை 9.00 மணியளவில் விழா தொடங்கப்பட்டது. பல போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும் கேடயமும் வழங்கப்பட்டன. இவ்விழா நண்பகல் 1.00 மணியளவில் நிறைவடைந்தது.
Leave Your Comments