ஜி பிலிம் பேக்டரி தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நடிக்கும்
“சென்னை 2 பாங்காக்”
ஜி பிலிம் பேக்டரி தயாரிப்பில் K.ஷாஜகான் மற்றும் K.ஆனந்தன் வழங்கும் “சென்னை 2 பாங்காக்“ என்ற புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகிகளாக சோனி சரிஷ்டா, அர்ச்சனா, யாழினி நடிக்கிறார்கள். இவர்களோடு மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், கும்கி அஸ்வின், வில்லன் வேடத்தில் தினேஷ் மேட்னே மற்றும் சுமா, சுஜா ஆகியோர் நடிக்கின்றனர்.
கதை சுருக்கம்: இந்தியாவில் இருந்து பாங்காக் நாட்டுக்கு கடத்தப்படும் பெண்கள் போலீஸ் தேர்வில் தோல்வி அடைந்த இளைஞன் தன் நண்பர்கள் துணை கொண்டு பாங்காக்கில் இருந்து பெண்களை எப்படி இந்தியா வுக்கு மீட்டு வருகிறான் என்பதை ஜனரஞ்சகமாக சொல்ல இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை, கொடைக்கானல், கோவா, பாங்காக், பட்டாயா, புக்கட் போன்ற இடங்களில் நடைபெறும். U.K.முரளி இசையில், தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, தனசேகரன் வசனத்தில் தியாகராஜ் இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சண்டைக்காட்சிகளும் பரபரப்பான சேஸிங் காட்சிகளும் இடம் பெறுகிறது. இதில் பாங்காக் ஸ்டண்ட் கலைஞர்கள் இடம் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் – தியாகராஜ் வசனம் – M.தனசேகர் இசை – U.K.முரளி ஒளிப்பதிவு – தேவராஜ் படத்தொகுப்பு – B.பிரியஜித் பிரேம்நாத் சண்டை பயிற்சி – மெட்ரோ மகேஷ் மக்கள் தொடர்பு – செல்வரகு தயாரிப்பாளர்கள் – K.ஷாஜகான், K.ஆனந்தன்