Radikaa Sarathkumar Actress

COLORS Tamil to premiere KODEESWARI

அன்புக்கும், தியாகத்துக்கு பெயர்போன பெண்களுக்கு அர்ப்பணிப்பு டிசம்பர் 23 ம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ராதிகா நடத்தும்கோடீஸ்வரிகேம் ஷோ.

* தினமும் பரிசு மழை, பார்வையாளர்களும் Voot app மூலம் பங்கேற்கும் வாய்ப்பு.

Radikaa Sarathkumar Actress in Colors Kodeeswari game
Colors Kodeeswari game Show

டிசம்பர் 23 ம் தேதி இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி கேம் ஷோ நிகழ்ச்சி துவங்குகிறது. தங்களை பற்றி மட்டுமல்லாமல் எப்போதும் தங்களது அன்பிற்குரியவர்களை பற்றி கனவு காண்பவர்கள் பெண்கள். அவர்களின் கனவுகளுக்கு இறக்கை கட்டி அவர்களை பறக்க செய்யும் நோக்கமாக, உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு கேம் ஷோவை பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும், ஸ்டூடியோ நெக்ஸ்ட் நிறுவனமும் அர்ப்பணிப்பதில் பெருமை கொள்கிறது. எப்போதும் திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ராதிகா சரத்குமார், கோடீஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்தும், ஒருங்கிணைத்தும் வழங்குகிறார்.

நிப்பான் பெயிண்ட்ஸ், அருண் எக்ஸ்செல்லோ, கோடக் மகேந்திரா வங்கி மற்றும் தமிழ் மேட்ரீமோனி ஆப் ஆகியவை இந்த நிகழ்ச்சியின் விளம்பர பார்ட்னர்களாக தங்களை இணைத்து கொண்டுள்ளன. டிசம்பர் 23 ம் தேதி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. மண்டல பொழுதுபோக்கு பரிவான Viacom18 பிளாட்பார்ம் ஆன VOOT ஆப் மூலமும் கோடீஸ்வரி நிகழ்ச்சியை கண்டுகளிக்கலாம்.

இதுதொடர்பாக மண்டல பொழுதுபோக்கு பிரிவான Viacom18 தலைவர் ரவீஸ் குமார் கூறும்போது, திரைப்படம், கலை, தொலைக்காட்சி போன்றவற்றிற்கான புரட்சிகரமான கருத்தாக்கங்களை உள்ளடக்கியது தமிழ் சந்தையாகும். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி துவக்கப்பட்டதில் இருந்தே புதுமையானவற்றை நாங்கள் சொல்லும் விதத்தில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறோம். ‘யாருக்கு கோடீஸ்வரராக விருப்பம்?’ என்ற உலகின் மிகவும் வெற்றிகரமான முதல் நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பெண்களுக்காக பிரத்யேக நிகழ்ச்சியாக ஒளிபரப்புகிறது. ஏனென்றால், தனக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் வாழும் பெண்களுக்காகவே இந்த நிகழ்ச்சியை வழங்குகிறோம் என்றார்.

ஒரு பயன்மிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கலர்ஸ் தொலைக்காட்சியின் வர்த்தக தலைவர் அனுப் சந்திரசேகரன் கூறும்போது, பெண்களானவர்கள் அறிவாளிகள், விழிப்புணர்வு கொண்டவர்கள், ஸ்மார்ட்டானவர்கள் என்பதை உணர்த்தும் விதமாக அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு நிகழ்ச்சியை பரிட்சார்த்த முறையில் நடத்துவது எங்களுக்கு மிகந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மிக அதிக அளவிலான தமிழ் பேசும் பெண்கள் நாடு முழுவதும் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை கதைகள் அவர்கள் சொந்த அனுபவத்துடன் கூடிய வீரதீரமிக்கதாக உள்ளது. விளையாட்டை நடத்தும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையிலும், எங்களின் முயற்சியானது பெண்கள் சவால்களை எதிர்கொண்டு வெற்றியை கைப்பற்றுவதே நோக்கமாகும். புரவலர், நண்பர், வழிகாட்டியாக செயல்படும், மிக பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகையான ராதிகா சரத்குமாருடன் நாங்கள் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

Radikaa Sarathkumar Actress in Colors Kodeeswari game
Radikaa Sarathkumar Actress in Colors Kodeeswari game

பார்வையாளர்கள் மத்தியில் மிக பிரபலமடைந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடத்தும் மற்றும் தொகுத்து வழங்கும் ராதிகா சரத்குமார், போட்டியாளர்களிடம் 15 கேள்விகளை கேட்பார். அந்த கேள்விகளுக்கு ரூ.1000 த்திலிருந்து ரூ.1 கோடி வரை பரிசாக கிடைக்கும். போட்டியாளர் அனைத்து 15 கேள்விகளுக்கும் வெற்றிகரமாக சரியான பதிலை அளித்துவிட்டால் அவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். விளையாடிக்கொண்டிருக்கும்போது போட்டியாளர்கள் 50:50, ஆடியன்ஸ் போல் (பார்வையாளர்களை உதவிக்கு அழைத்தல்), ஆஸ்க் தி எக்ஸ்பெர்ட்( நிபுணர்களிடம் கேட்டு பதில் அளித்தல்), பிளிப் (சில பதில்களில் ஒன்றை தேர்ந்தெடுத்தல்) ஆகிய 4 விதமான ஹெல்ப் லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தும் ராதிகா சரத்குமார் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். இந்த நிகழ்ச்சி குறித்து அவர் கூறும்போது, ஒரு சாதாரண பெண்ணை கோடீஸ்வரி ஆக்குவது என்ற எண்ணமே மகிழ்ச்சியை அளிக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அறிமுகமானபோது எனது இதயத்திலும் கூட கனவுகளும், சிறிய ஆசைகளும் இருந்தன. எனது வேலையை சரிவர நிறைவேற்றியபோது ஆண்டுகள் செல்ல செல்ல அவை வளர்ந்து கொண்டே இருந்தன. என்னிடம் இருந்த அதே நோக்கத்தையே இந்த போட்டியில் பங்கேற்பவர்களிடமும் பார்க்கிறேன் என்றார்.

கோடீஸ்வரி நிகழ்ச்சியை தயாரிப்பது ஸ்டூடியோ நெக்ஸ்ட் ஆகும். இது சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவாகும். இந்த நிகழ்ச்சி தொடர்பான இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கான லைசன்சை இந்த நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. சுமார் 9 மொழிகளில் 1,800 அதிகமான எபிசோட்களை தயாரித்து ஒளிபரப்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சி தொடர்பான ஸ்டூடியோ நெக்ஸ்ட் தலைவர் இந்திராணி சக்கரபர்த்தி கூறும்போது, இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டூடியோ நெக்ஸ்ட் தலைவர் இந்திராணி சக்கரவர்த்தி கூறும்போது, இந்த ஆண்டு பல்வேறு மொழிகளில் இந்த முத்தாய்ப்பான நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முழுபொறுப்பும் ஸ்டூடியோ நெக்ஸ்ட் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, 2019 ம் ஆண்டு துவக்கப்பட்ட 6 நிகழ்ச்சியில் தமிழும் ஒன்று. இந்த கேம் ஷோ பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் நிலையில், கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் முதல் முறையாக அனைத்து போட்டியாளர்களும் பெண்களாக பங்கேற்கிறார்கள். போட்டியாளராக முன் இருக்கையில் அமரும் மிக சிறந்த வாய்ப்பை இந்த சீசன் அனைத்து பெண்களுக்கும் வழங்குகிறது என்றார்.

வூட்(VOOT) ஆப் மூலம் பார்வையாளர்கள் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.

Radikaa Sarathkumar Actress
Radikaa Sarathkumar Actress in Colors Kodeeswari game

Leave Your Comments