கோட்டூர்புரம் பகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள பொதுப்பிரச்சனைகள், மற்றும் சமீபத்திய புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்,அவற்றிற்கு விரைவாக தீர்வு காணுதல் ஆகியன குறித்து விரிவாக விவாதம்
கோட்டுர்புரம் எக்ஸ்னோரா இன்னவேட்டர்ஸ் கிளப் அமைப்பின் சிறப்புக் கூட்டம் 18.12.16 மாலை 6.00 மணிக்கு ரெட்டி தெரு, கோட்டுர்புரத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கோட்டூர்புரம் பகுதியில் இயங்கும் சிவிக் எக்ஸ்னோரா அமைப்புகள், மற்றும் பொதுநலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோட்டுர்புரம் எக்ஸ்னோரா இன்னவேட்டர்ஸ் கிளப் அமைப்பின் தலைவர் ரங்கநாயகலு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் ஆர். கோவிந்தராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கோட்டூர்புரம் பகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள பொதுப்பிரச்சனைகள், சமீபத்திய புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்,அவற்றிற்கு விரைவாக தீர்வு காணுதல் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- கோட்டூர்புரம் பகுதியில் பல்வேறு உட்தெருக்களில் இன்னும் அகற்றப்படாமலிருக்கும்மரக்கழிவுகளைகூடுதல்பணியாளர்களைக் கொண்டு விரைவாக அகற்ற உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக்கழிவுகள் மீதே தினமும் வீடுகளில் உற்பத்தியாகும் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் அனைத்து கழிவுகளையும் விரைவாக அகற்ற நடவடிக்கை தேவை.
- கோட்டூர்புரம் பகுதியில் புயலுக்கு வீழ்ந்த மரங்களுக்கு பதிலாக நட 100 மரக்கன்றுகளை மாநகராட்சி தந்துதவினால் அதனை நட்டுப் பராமரிக்கும் பணியை கோட்டூர்புரம் எக்ஸ்னோரா அமைப்பும், பொதுநலச்சங்கங்களின் கூட்டமைப்பும் தயாராக உள்ளது.
- கோட்டூர்புரம் பகுதியில் பிரதான சாலைகளான பொன்னியம்மன் கோயில் தெரு மற்றும் எல்லையம்மன் கோயில்தெரு ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பகுதியில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
- கோட்டூர்புரம் பகுதியில் அமைந்துள்ள R M C PLANT – இனால் இப்பகுதியில் வசிப்பவர்களும் இப்பகுதிக்குவந்து செல்பவர்களும்பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இதனை இப்பகுதியில் இருந்து அகற்றககோரி இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும், பல போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை.உரிய நடவடிக்கையை அரசுஉடனே மேற்கொள்ளவேண்டும்.