சென்னை ரெயின்ட்ரீ ஓட்டலில் மலேசிய உணவுத் திருவிழா
* சிறந்த, சுவையான மலாய் உணவுகளை சென்னைக்கு கொண்டு வரும் ரெயின்ட்ரீ.
* உணவுத் திருவிழாவிற்கு வாருங்கள்; மலேசிய சமையல்கலை நிபுணர் மேட் சபீ பின் ஹாரூனின் ருசியான உணவுகளை சுவைத்து மகிழுங்கள்.
சென்னை, செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள ரெயின்ட்ரீ ஓட்டலில் மலேசிய உணவுத் திருவிழா 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. மலேசிய உணவின் உண்மையான சுவையை சென்னை மக்களுக்கு கொடுக்கும் விதமாக இந்த உணவுத் திருவிழா ரெயின்ட்ரீ ஓட்டலின் சாப் சாய் உணவகத்தில் நடைபெற உள்ளது. இதில் மலேசிய உணவு வகைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமிக்க சிறந்த சமையல்கலை நிபுணரான மேட் சபீ பின் ஹாரூன் கலந்து கொள்கிறார்.
![Malaysian Food Festival Chennai](https://i0.wp.com/www.chennaisonline.com/wp-content/uploads/2019/11/Malaysian-Food-Chennai.jpg?resize=640%2C358)
மலேசிய உணவு வகைகளில் இந்திய, சீன மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள மூலிகை பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக இந்த உணவு வகைகள் மிகுந்த சுவையுடன் காரசாரமாக இருக்கிறது. இந்த உணவுத் திருவிழாவில், பசியை தூண்டக்கூடிய சடே அயாம் (மலேசிய குழம்பு, சிக்கன் சுப்ரீம், தேங்காய் பால், எலுமிச்சை புல், வேர்க்கடலை சாஸ்), கேதும்பர் அயாம் (கொத்தமல்லி, புதிய மிளகு சோளம், பூண்டு, சிப்பி சாஸ்), இகான் மசக் மேரா (டிலாபியா மீன், பெலகன் பேஸ்ட், மிளகாய், தக்காளி கூழ்), சம்பல் ஹிஜாவ் பெட்டாய் உதாங் பைலிங் மென்யங்கட் (இறால், பச்சை மிளகாய், எலுமிச்சை புல்) ஆகியவை இடம் பெறுகின்றன.மேலும் சூப் வகைகளில், மலேசிய டாம் யூம் சூப் (எலுமிச்சை புல், நறுமணமிக்க வேர், எலுமிச்சை இலைகள்), முட்டை கடுகு சூப் (நன்கு வதக்கப்பட்ட வெங்காயம், இஞ்சி, முட்டை, கடுகு, சுவையூட்டிகள்) மற்றும் பூசணி சூப் (பூசணி, தேங்காய் கிரீம்) ஆகியவையும் இடம் பெற உள்ளது. மலேசியாவின் தனித்துவமிக்க பிரதான உணவான கரி சையூர் (சீமை சுரைக்காய், பேபி கார்ன், ப்ரோக்கோலி, தேங்காய் பால், காய்ந்த மிளகாய்), சயூர் சம்பல் கொரெங் தாஹு (டோபு, மிளகுத்தூள், மிளகாய் பேஸ்ட்), பாஸ் லாட் அசம் பெடாஸ் (சீ பாஸ் என்னும் ஒரு வகையான மீன், பெலகன் பேஸ்ட், மிளகாய் பேஸ்ட், புளி), சோட்டோங் சம்பல் (ஸ்க்விட், பெலகன் பேஸ்ட், புளி, மிளகாய் பேஸ்ட்), பிரைடு க்வே டியோ (நூடுல்ஸ், முட்டை, கோழி துண்டுகள், மொச்சை பயறுகள், பச்சை கடுகு மற்றும் மிளகாய் பேஸ்ட்), மலேசியாவின் தேசிய உணவான நாசி லெமக் (பாசுமதி அரிசி, நெத்திலி மீன், புளி, தேங்காய் பால், முட்டை, வேர்க்கடலை), பிரபலமான பெரனக்கன் ஸ்டைல் நூடுல்ஸ் அசம் லக்சா (நூடுல்ஸ், புளி, கானாங்கெளுத்தி மீன், எலுமிச்சை புல், இறால் பேஸ்ட்) மற்றும் பலவிதமான உணவு வகைகளை இந்த உணவுத் திருவிழாவில் உண்டு மகிழலாம்.
![The Raintree, St Mary’s Road, Malaysian Food Festival](https://i0.wp.com/www.chennaisonline.com/wp-content/uploads/2019/11/The-Raintree-St-Marys-Road.jpg?resize=640%2C427)
மேலும் மலேசிய இனிப்புகள் பிரமாதமாகவும், பலவித வண்ணங்கள் நிறைந்தவையாகவும், சுவையாகவும் நாவில் நீர் ஊறக்கூடியதாகவும் இருக்கும். குஹே பாஹுலு (சிறிய மென்மையான கேக்குகளை பிளாக் காபியில் நனைத்து சாப்பிடுவது), மலேசியர்களின் விருப்பமிக்க உள்ளூர் இனிப்பான செங் தெங் (பேரிச்சம்பழம், ஜின்கோ பருப்புகள், சாகோ, பார்லி, பனை வெல்லம்) ஆகிய இனிப்புகளை சுவைத்து மகிழலாம். உங்கள் அன்பிற்குரியவர்களுடன் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ரெயின்ட்ரீ ஓட்டலின் சாப் சாய் உணவகத்திற்கு வாருங்கள்; மலேசிய உணவுகளை உண்டு மகிழுங்கள். மேலும் விவரங்கள், முன் பதிவிற்கு +91 44 4225 2525.என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
WHAT | Malaysian Food Festival |
WHERE | The Raintree, St Mary’s Road |
WHEN | Lunch and Dinner | 15.11.2019 – 24.11.2019 |
For more details, reservation and queries, please contact at +91 44 4225 2525.
Leave Your Comments